2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் உப தபால் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியினை பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பிரித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.

-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த சூழ்நிலையின் காரணமாக குறித்த காணி நீண்ட காலமாக உயிலங்குளம் பொலிஸ் நிலையாமாக காணப்பட்டது.
குறித்த காணியில் பல்வேறு அரச திணைக்களங்களின் கட்டிடங்களும், மன்னார் பிரதேச சபைக்காண கட்டிடங்களும் காணப்பட்டன.

இந்நிலையில் மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் காணப்பட்ட கட்டிடத்தில்  6 மாத ஒப்பந்தத்துடன் பொலிஸார் இருந்துள்ளனர்.

இதற்கான ஒப்பந்தமானது மன்னார் பிரதேச சபையினால் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை திடீர் என மன்னார் பிரதேச செயலகத்தின் நில அளவை அதிகாரிகள் உயர் அழுத்தங்களுக்கு மத்தியில் குறித்த காணிக்குச் சென்று மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியினை பிரித்து பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு வழங்குவதற்காண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு உயிலங்குளம் மக்களும், மன்னார் பிரதேச சபையின் உப தலைவராகிய நானும் சம்பவ இடத்திற்குச் சென்று எதிர்ப்புத் தெரிவித்தோம்.

எங்களுடன் அங்கிருந்த அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் தலைவர்  மட்டீன் டயேஸ் சம்பவ இத்திற்கு வந்தார்.

எனினும் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குறித்த காணியில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு வழங்க வேண்டாம் என மன்னார் பிரதேச சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேறு திணைக்களங்களை அவ்விடத்தில் அமைக்க அந்த மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நில அளவைகள் உடனடியாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X