2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் இளைஞரை காணவில்லை

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், புதுவெளியை சேர்ந்தவரும் தற்போது புத்தளம் நாகவில்லு றஸூல் நகரில் வசித்து வந்தவருமான 29 வயதான எஸ்எம்.சப்வான் என்ற இளைஞரை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணமாகி ஒன்றறை வருடங்களேயான இவர், சம்பவ தினம் தனது சகோதரரின் கடை அமைந்துள்ள நொச்சியாகமவிற்கு சென்று திரும்பும் வழியிலேயே காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நொச்சியாகமவில் இருந்து பஸ்ஸில் வைத்து தனது வீட்டாருடன்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுஇ தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவர் பற்றிய தகவல் அறிந்திருப்பின் அஜ்மல் - 0714983689 சபீல் - 0713429500 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X