2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விதை நெல் அறிமுகமும் ஏல விற்பனையும்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள வவுனியா தாண்டிக்குளம் அரச விதை உற்பத்திப் பண்ணையில் நல்லின விதை நெல் அறிமுகமும் ஏல விற்பனையும் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.சகீலாபானு தெரிவித்துள்ளார்.

நெல் இனங்களை அலுவலக நேரத்தில் பார்வையிட முடியும் என்பதுடன், ஏலத்தில் நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவர்கள் வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் மீளளிக்கக்கூடிய வைப்புப் பணமாக ரூபா 10 ஆயிரம் ரூபா  செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும்,  ஏலத்தில் எடுப்பவர்கள் அன்றையதினமே அதற்குரிய பணத்தைச் செலுத்தி பண்ணையிலிருந்து நெல்லை எடுத்து செல்லலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X