2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 29 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


அம்புலன்ஸ் வண்டி மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஓமந்தை பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் சம்பவத்தில்  ஓமந்தை பரசன்குளத்தை சேர்ந்த 72 வயதான எஸ். சொர்ணலிங்கம் என்பவர் பலியாகியுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

ஓமந்தை பகுதியிலிருந்து வந்த மல்லாவி வைத்தியசாலையை சேர்ந்த அம்புலன்ஸ் வண்டியே துவிச்சக்கரவண்டியில் வந்தவரை மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே மரணமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X