2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார மேம்பாட்டுக் கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரத் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சுகாதார மேம்பாட்டுக் கண்காட்சியும், விழிப்புணர்வு கலைநிகழ்வுகளும்; முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் திங்கட்கிழமை இடம்பெற்றன.

முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ராஜ்குமாரின தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சுகாதாரம் மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சர் டொக்டர் பி.சத்யலிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுhகதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.திலீபன், முல்லைத்தீவு பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் உ.முனீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட பத்து பாடசாலைகளின மாணவர்களின் கண்காட்சியும், சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வூடடும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X