2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தேவன்பிட்டியில் பாலம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தேவன்பிட்டிக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் 2.7 மில்லியன் ரூபா நிதியுதவியுடனும் தேவன்பிட்டிக் கிராம மக்களின் பங்களிப்புடனும் மன்னார் மாவட்ட 'சோஆ; நிறுவனம் இந்தப் பாலத்தை நிர்மாணித்தது.

இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டேவிற் டாலி, ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டு பிரிவுக்கான தலைவர் வில்லி வடன் பேக்,  'சோஆ' நிறுவனத்தின் இலங்கைக்கான நன்கொடைப்பிரிவின் தலைவி றேபேக்கா ஓவன், மன்னார் மாவட்ட 'சோஆ' நிறுவனத்தின்  முகாமையாளர் ஜோச் அந்தோனிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டேவிற் டாலிக்;கு தேவன்பிட்டிக் கிராம மக்கள் சார்பில் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X