2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதிகளில் அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்த மற்றும் காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருந்த ஆறு வர்த்தகர்களுக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தினால் தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கிளிநொச்சி ஏ- 9 வீதியில் பரந்தன் முதல் தருமபுரம் வரையான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த வாரம் விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டனர். 

இதில் அதிகூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட ஆறு வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இதனைத்; தொடர்ந்து, மேற்படி வர்த்தகர்களை நேற்று புதன்கிழமை (30) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி குறித்த வர்த்தர்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் 6 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X