2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மகளுக்கு பாலியல் இம்சை கொடுத்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

தனது நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் இம்சை கொடுத்த குடும்பஸ்தரை தொடர்ந்தும் விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது நான்கு மாத பெண் குழந்தைக்கு பாலியல் இம்சைகளை கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் முள்ளியவளைப் பொலிஸார்  கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாக விளக்கமறியளில் வைக்கப்பட்ட குறித்த நபர் மீண்டும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது தொடர்ந்தும் 14 நாட்களுக்கு விளக்கமறியளில் வைக்கும்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X