2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற  விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் திணைக்களத்தின்  உதவி ஆணையாளர் கே.சுலோஜினி தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. 

2,500 ரூபாவிற்கு குறைந்த மாத வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 11 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதன்போது ஒவ்வொரு மாணவருக்கும்  15,000 ரூபா வங்கியில் வைப்பிலிட்டு வங்கிக் கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் நீர்;ப்பாசன தொழில்நுட்ப  உத்தியோகஸ்தர் எஸ்.தாஸ், கமநல உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உதவியாளர்கள், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X