2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் பொது சேமக்காலையை புனரமைக்கும் பணி

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் பொது சேமக்காலையை மன்னார் நகர சபை புனரமைத்து வருகின்றது.

உயிரிழந்தவர்களின் நினைவுதினமாகிய  ஆத்தூமாக்கள் திருநாள் நாளை சனிக்கிழமை நினைவுகூரப்படவுள்ளது. இந்த நிலையிலேயே  மன்னார் பொது சேமக்காலையை கடந்த இரு வாரகாலமாக துப்பரவு செய்யும் பணியினை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.

இந்த சேமக்காலை புனரமைப்புப் பணிகள்  மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானபிரகாசத்தின் பணிப்புரைக்கு அமைய மன்னார் நகரசபையின் செயலாளர் எல்.பிறிட்டோவின்; நேரடிக் கண்காணிப்பின் கீழ்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் குறித்த பொது சேமக்காலை மிக மோசமான முறையில் செடிகள் வளர்ந்து காடுகளை போல காட்சி அழித்ததுடன், கவனிப்பாரற்று குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மன்னார் நகரசபை குறித்த பொது சேமக்காலையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X