2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 01 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் வட மாகாணத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முன்னேற்பாட்டு செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக வட மாகாண சுகாதார அமைச்சரினால் இன்று (01) சுகாதார சேவை அதிகாரிகளுடன் வவுனியாவில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவுவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள், அதனை தடுப்பதற்கு மாவட்ட சுகாதார திணைக்களங்களில் உள்ள வளங்கள், டெங்கை கட்டப்படுத்துவதற்கு மாவட்ட ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உட்பட சுகாதார நிலைமைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வவுனியா பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துஇராயடலில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட வட மாகாண சுகாதார திணைக்களங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X