2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களின் விருப்பத்துடனேயே பரீட்சை இடம்பெற்றது: அதிபர்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஆசிரியர்களின் விருப்பத்துடனேயே பரீட்சையினை விடுமுறை தினத்தில் நடத்தியதாக செட்டிகுளம் மகா வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நேற்று முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் மணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சையொன்று காலை 8 மணியில் இருந்து இடம்பெற்றமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இநத விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம்  வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஏற்கனவே திட்டமிட்டத்தற்கு அமைவாக 30ஆம், 31ஆம் மற்றும் 1ஆம் திகதிகளில் மாணவர்களின் நன்மை கருதி எதிர்வரும் தவணைப் பரீட்சைக்காக அல்லது அரசால் நடத்தப்படும் சாதாரண தர பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சையை நடத்த திட்டமிட்டபடியே இன்று பாடசாலையில் பரீட்சை இடம்பெற்றிருந்தது.

அரசால் விடுமுறை தினமாக திடீரென கிடைத்த அறிவித்தலால் அவ்விடுமுறை தொடர்பில் எம்மால் அதனை ஏற்கவோ அல்லது திங்கட்கிழமை எமது பாடசாலை நிகழ்வொன்று திட்டமிட்டுள்ள நிலையில் அதனை தவிர்த்து வேறு நாளில் நடத்த முடியாதுள்ளமையாலும் ஆசிரியர்களின் விருப்பத்திற்கு இணங்க வெளி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் வீடு செல்ல அயலில் உள்ள ஆசிரியர்களின் உதவியுடன் இப் பரீட்சையை நடத்தி முடிக்கப்பட்டது.

எனினும் இது பாடசாலை நாளாக கருத்தப்படாது என ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டதன் பெயரில் இப்பரீட்சையை நாம் 10.30 மணி வரை நடத்தினோம்" என்றார்.

எனினும் அதிபரின் இவ்வாறான செயற்பாடு கல்வி அதிகாரிகளை திசை திருப்பும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த அதிபர் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மனித உரிமையை மீறியுள்ளார் என்றார்.

இதேவேளை கல்வி அமைச்சின் செயலாரினால் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு 31.10.2013 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தவணை பரீட்சைகள் நடத்துவதாக இருந்தால் அதற்கு செயன்முறையொன்றை அமைக்க வேண்டும் எனவும் இன்றைய தினத்தில் திட்டமிடப்பட்ட வேலைகைள எதிர்வரும் 9அம் திகதி நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எனவே இப்பாடசாலையின் அதிபர் கல்வி அதிகாரிகளின் கட்டளைகளை மீறி செயற்பட்டுள்ளார். ஆகவே இவர் மீது கல்வி திணைக்களத்தின் அதிகாரிகளும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X