2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் பொலிஸார் - சிவில் அமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பெரியகடையில்  சிவில் அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும் மன்னார் பொலிஸாருக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

பெரியகடை பொது மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மன்னார் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி துஸார தளுவத்த தலைமையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது மன்னார் பெரியகடை  சிவில் அமைப்புகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான வழிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது பல கோரிக்கைகள் சிவில் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த மன்னார் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி துஸார தளுவத்த குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X