2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மீனவச் சமூகங்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டும்: டெனிஸ்வரன்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மீனவச் சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதுடன், அதன் மூலமாகவே தன்னாலான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள முடியுமென வடமாகாண மீன்பிடி அமைச்சர்  பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.  

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கிவரும்  பிரச்சினைகள்  தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு இராஜதந்திர முடிவை பெற்றுத்தருவதில் நான் முனைப்பாகச் செயற்படுவேன்.
மேலும், இலங்கையிலும்  தடைசெய்யப்பட்ட  தொழில்களை எமது மீனவர்களும் நிறுத்த வேண்டும். ஏனெனில் கடல் வளங்கள் வெகுவாக அழிந்துகொண்டு செல்லும் அபாயம் இருப்பதால், எதிர்காலத்தில் வேறு நாடுகளிலிருந்து உணவுக்கான மீனை நாம் கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.

எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் எதை விட்டுச் செல்லப்போகின்றோம் எனச் சற்று சிந்தியுங்கள். எதிர்காலத்தில் மீனவர்களின் அபிவிருத்தி தொடர்பில் நான் அக்கறையுள்ளவனாக இருப்பேன்' என்றார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் அனுபவித்து வருகின்ற கஷ்டங்கள் தொடர்பில் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் செயலாளர் எஸ்.நிக்சன் முன்வைத்தார்.

இந்தியப் படகுகளின் அத்துமீறிய வருகையால் சிறுதொழில் மீனவர்களின் நாளாந்த தொழிலில் மிகுந்த பிரச்சினைகள் ஏற்படுவதுடன், மீன்பிடி உபகரணங்களின் விலை ஏற்றமும் மக்களை வெகுவாக பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X