2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம்: பிக்குவுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 நவம்பர் 06 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பிரியந்த ஹேவகே, மடுகந்த சித்தும் சத்துரங்க
,நவரட்ணம் கபில்நாத்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வட மாகாண உப-சங்கநாயக்க வண.அட்டமகஸ்கட கல்யாண திஸ்ஸ தேரரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான தேரரை பொலிஸார் வவுனியா நீதவான் வீ.ராமகமலன் முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபரான கல்யாண திஸ்ஸ தேரரினால் அட்டமகஸ்கட பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றும் நடத்தப்பட்டது. அந்த இல்லத்தில் தமிழ் மற்றும் சிங்கள சிறுவர்கள் 50 பேர் இருந்துள்ளனர். 

அந்த இல்லத்திலிருந்த சிறுவர்களில் அறுவரையே குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் சிறுவர்கள் அறுவரும் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0

  • Ash Wednesday, 06 November 2013 09:09 AM

    மனிதனின் பொதுவான தேவைகள் எல்லோருக்கும் சமமானதே... இயற்கைக்கு எதிராக செயற்படுவது நல்லதல்ல.

    Reply : 0       0

    VALLARASU.COM Wednesday, 06 November 2013 03:39 PM

    இப்படிப்பட்டவர்கள்தான் பசுவதைக்கு எதிராக நெருப்பு குளிப்பவர்கள், பசுவை வெட்டி வயிற்று பசிக்காக உண்ணுகிறார்கள். ஆனால் நீங்களோ சிறுவர்களை காம பசிக்காக உண்ணுகிறார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X