2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முள்ளியவளை பொதுசந்தையை புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்;பட்ட முள்ளியவளை பொதுசந்தை நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ரவீந்தரநாதன் தெரிவித்தார்.

இதற்கென பிரதேசசபை 56 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 60 வருடங்களுக்கும் பழைமை வாய்ந்த முள்ளியவளை பொதுச்சந்தைக் கட்டடத்தை சகல வசதிகளுடன் புனரமைத்து தருமாறு பொதுமக்களும், வியாபாரிகளும் தொடர்ச்சியாக விடுத்து வந்த வேண்டுகோளுக்கமையவே இச்சந்தை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முள்ளியவளை பொதுச்சந்தைக் கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாதத்திற்குள் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, பொதுசந்தை தற்காலிகமாக இருந்த இடத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ரவீந்தரநாதன் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X