2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வாகனத்தில் இருந்து வெடி பொருட்கள் மீட்பு

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் இராணுவ பாவனையில் இருந்த பார ஊர்தியில் இருந்து சி 4 ரக வெடி பொருட்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட இப் பார ஊர்தியானது 2007 ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தினரின் பாவனையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு முன்னாள் விடுதலைப்புலிகள் போராளியொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இப் பார ஊர்தியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ நிறையுடைய வெடி பொருட்கள் புதன்கிழமை (6) மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டு இராணுவ பாவனையில் உள்ள அனைத்து வாகனங்களும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X