2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாணவர்கள் கேகாலைக்கு நல்லெண்ண விஜயம்

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாணவர்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை காலை கேகாலைக்கு சென்றுள்ளனர். வடக்கு - தெற்கு உறவுப் பால நிகழ்வுக்காகவே  மன்னார் மாணவர்கள் கேகாலைக்குச் சென்றுள்ளனர்.

தலை மன்னார் அரச தமிழ் கலவன் பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் 40 மாணவ மாணவிகளே இந்த விஜயத்தில் பங்குபற்றியுள்ளனர்.

எதிவர்வரும் சனிக்கிழமை வரை மூன்று தினங்கள் கேகாலையில் தங்கியிருக்கும் மாணவர்கள் அங்கு இடம்பெறும் கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாணவர்களுடன் தலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் கேகாலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X