2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்று ஆகிய பகுதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை நேற்று  புதன்கிழமை இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பிரதேச சபையின் செயலாளர் எஸ.ரவீந்தரநாதன் தெரிவித்தார்.

வீதியோரங்களில் தரித்து நிற்கும் மாடுகளையும் கன்றுகளையும் உரிய முறையில் பாதுகாப்பாக வளர்க்குமாறு கடந்த மாதம் முதல்  ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மாடுகள் இரவு நேரங்களில் வீதியோரங்களில் தரித்து நிற்பது மற்றும் படுத்துறங்குவது என்பனவற்றினால் அடிக்கடி விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறன அவர் தெரிவித்தார்.

எனவே இரவு நேரங்களில் வீதியோரங்களில் சுற்றித்திரியும் மற்றும் படுத்துரங்கும் மாடுகளை கடந்த மாதம் முதல் முல்லைத்தீவு நகரிலும், நேற்று முதல் முள்ளியவளை பிரதேசங்களிலும் பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதேச சபையின் செயலாளர் எஸ.ரவீந்தரநாதன் குறிப்பிட்டார்.

இவ்வாறு சபையினால் பிடிக்கப்படும மாடுகளுக்கு குறித்த மாட்டின் உரிமையாளர்கள் 1,000 ரூபாவை தண்டப்பணமாக  செலுத்திய பின்னரே கொண்டுசெல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X