2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தம்பனைக்குளம் கிராம மக்களை வேறு இடத்தில் குடியமர்த்துமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 11 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தொடர்ந்தும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வரும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள், தங்களை உடனடியாக வேறு இடத்தில் குடியேற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் அக்கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தம்பனைக்குளம் கிராம மக்களாகிய நாங்கள் 1997, 1998ஆம் ஆண்டுகளில் யுத்தம் காரணமாக களிமோட்டை, ஜீவநகர், கற்கிடந்த குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையங்களில் வசித்து வந்தோம்.

எங்களை 2007 ஆம் ஆண்டு தம்பனைக்குளம் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்தனர்.மீள் குடியமர்த்தப்பட்டு 6 ஆண்டுகளில் 2 தடவைகள் வெள்ளப்பெருக்கின் காரணமாக இடம் பெயர்ந்துள்ளோம்.

இதனால் இந்த தம்பனைக்குளம் கிராமம் தொடர்ந்தும் மக்கள் வசிப்பதற்கு ஏற்ற சாதகமான இடமாக இல்லை. இதனால் வேறு இடத்தில் குடியமர்த்தக்கோரி மடு உதவி அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர், அமைச்சர், ஆளுனர் உற்பட பலரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஆனால் இதுவரை எவ்வித முடிவும் இல்லை. இக்கிராமத்தில் வசிக்கின்ற நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து எங்கள் வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம்.

ஆகவே சிறு கைத்தொழில்கள் மற்றும் தோட்டங்களை வைத்து வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்பக் கூடிய இடமாக நாங்கள் கருதும் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 2, 3ஆம் கட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் எங்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்' என தம்பனைக்குளம் கிராம மக்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X