2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தாழ்நிலப் பிரதேச மக்களை பாதுகாக்குமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்கள் வெள்ள அபாயத்தை  எதிர்நோக்க நேரிட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டி எடுக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கைத்தொழில் முதலீட்டு அமைச்சருமான ரிசாட் பதியுதீன் பணித்துள்ளார்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகளுக்கும் நேற்று திங்கட்கிழமை அவர்  இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

தற்போது வடக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் மழையைத் தொடர்ந்து அமைச்சர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்வதுடன், கடும் காற்று வீசுகின்றது. இந்த நிலையில், காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுவரும் எதிர்வுகூறல் தொடர்பில்  பிரதேச மக்களுக்கு  அறிவுறுத்தல்களை வழங்குமாறு அரசாங்க அதிபர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பில் நினைவுபடுத்தியுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன், எதிர்காலத்தில் இவ்வாறான அபாயங்களிலிருந்து மக்களை பாதுகாக்க முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X