2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் இடர் முன்னாயத்தங்களுக்கான தகவல் சாதனங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ இணைப்புப் பிரிவுக்கு இடர் முன்னாயத்தங்களுக்கான ஒரு தொகுதி தகவல் தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச வேர்ல்ட் விஷன் நிறுவனம் இந்த தகவல் தொடர்பாடல் இலத்திரனியல் சாதனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரம், மல்ற்றி மீடியா புரஜெக்டர், பெக்ஸ் இயந்திரம், மேசைக் கணினி, மடிக்கணினி, இடம்பெயர் ஒலிபெருக்கிகள் மற்றும் இன்னும் சில பொதுவான ஒலிபரப்புக் கருவிகள் என்பன வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ இணைப்புப் பிரிவின் சார்பில் இந்த சாதனங்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் சர்வதேச வேர்ல்ட் விஷன் நிறுவன முல்லைத்தீவு நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஜே.நிசாந்தன், வட பிராந்திய இடர் தணிப்பு இணைப்பாளர் கே.ஜே.குறூஸ், முல்லைத்தீவு மாவட்டச் செயலக இடர் முகாமைத்துவப் பிரிவு அதிகாரி ஏ.திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X