2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.ம.சு.முவின் வடமாகாண சபை உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்னம் கபில்நாத்


வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியில் நடத்தப்பட்ட தீப்பந்தப் போராட்டத்திற்கு எதிராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால தலைமையில் வவுனியாவில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

'நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்காக பிரிவினை கோருபவர்களுக்கு எதிரானவர்கள்' என்ற அமைப்பினரே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தங்களின் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மகஜரை ஜனாதிபதிக்கு வழங்கவும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஏ-9 வீதியிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டது.

இதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். ஏ-9 வீதியில் பேரணியாகச் சென்ற இவர்கள், வவுனியா செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X