2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பனைமரம் வீழ்ந்து பெண் மரணம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகருணாகரன்


விசுவமடுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை பனைமரம் வீழ்ந்ததில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

விசுவமடுவைச் சேர்ந்த  58 வயதான சிதரம்பம்  அந்தோனியம்மா என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக வளவு ஒன்றிலிருந்த பனை மரத்தை வெட்டிக்கொண்டிருந்தபோதே, குறித்த பெண் மீது பனைமரம் வீழ்ந்துள்ளது.

இதில் காயமடைந்த இந்தப் பெண் உடனடியாக  தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X