2025 ஜூலை 28, திங்கட்கிழமை

வவுனியாவில் கிராமிய வங்கி திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியொன்று வவுனியாவிலுள்ள கடை வீதியில்; நேற்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து மேற்படி கிராமிய வங்கியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்துள்ளார். 

இந்த நிகழ்வில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசகத்தி ஆனந்தன், வினோநோகதாரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X