2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா காளி கோவிலில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, குளுமாட்டுச் சந்தியிலுள்ள காளி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை   இரவு தங்கநகைகள் உள்ளிட்டவை கொள்ளையிடப்பட்டுள்ளன. 

இக்கோவிலின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  அத்துடன், இக்கோவிலின் மடப்பள்ளி உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மேலும், கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த வாள்கள் வெளியில் வீசப்பட்டுள்ளன.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸில் மேற்படி கோவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சுமார் 200,000 ரூபா பெறுமதியான பொருட்கள்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கு முன்னரும் நீர்ப்பம்பிகள் மற்றும் உண்டியல்கள் களவாடப்பட்டு வந்ததாகவும் கோவில்  நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X