2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் விவசாயிகள், கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னார், உயிலங்குளத்திலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்தனர்.

விவசாயச் செய்கைக்கான உரம் மற்றும் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் கிடைக்கின்ற உதவிகளும் உரிய முறையில் கிடைப்பதில்லை. மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்;படுத்தப்படுகின்ற குளங்கள் உரிய முறையில் புனரமைக்கப்படாதுள்ளதெனவும்  விவசாயிகள் கூறினர்.

மேலும், இவ்வாறு புனரமைக்கப்படாதுள்ள குளங்களை அடையாளம் கண்டு புனரமைப்பதற்கான  நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை,  தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகள் இல்லாமையால் தாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்  தொடர்பில் நானாட்டான்;, முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட பகுதிகளிலுள்ள கால்நடை வளர்ப்போர் முன்வைத்தனர். 

மேலும், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை ஒதுக்கித் தருவதற்கான நடவடிக்கை எடுக்குக்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X