2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் சிறுவர் பூங்காவுக்கு அருகில் புதிய கடைத்தொகுதி

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகரப்பகுதியிலுள்ள சிறுவர் பூங்காவுக்கு அருகில் பல இலட்சம் ரூபா செலவில் கடைத்தொகுதியொன்று தற்போது அமைக்கப்பட்டு வருவதாக மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மன்னார் நகரசபை முன்னெடுத்துவருகின்ற நிலையிலே, இக்கடைத்தொகுதி வேலைத்திட்டமும் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

மன்னார்  சிறுவர் பூங்காவுக்கு அருகில்   40 கடைகள்  அமைக்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 21 கடைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கடையும் 10 அடி நீளமும் 10 அடி அகலமும் உடையதாக அமைக்கப்படும்.  கடையொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா செலவாகின்றதெனவும் அவர் கூறினார். 

புதிதாக அமைக்கப்படும் கடையொன்றுக்காக 500,000 ரூபா  பெறப்படுமென்பதுடன், மன்னாரை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட வியாபாரிகளுக்கு இக்கடைகள் நிரந்தரமாக வழங்கப்படவுள்ளது.  எனினும் இக்கடைகள் வெறோருவருக்கு கை மாற்ற முடியாதெனவும் அவர் கூறினார்.

இக்கடைத்தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ளது.   நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மன்னார் நகரசபைக்குச் சொந்தமான வாரச்சந்தை   பகுதியிலுள்ள கடைகள் அகற்றப்பட்டு தற்போது அமைக்கப்பட்டுவரும் புதிய கடைத்தொகுதிக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், மன்னார் நகரசபைக்குச் சொந்தமான வாரச்சந்தைப் பகுதியிலிருந்து மாற்றப்படும் கடைகள் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடைத்தொகுதிக்கு மாற்றப்பட்ட பின் பழைய சந்தைப்பகுதி வாராந்த (சனி,ஞாயிறு) பொதுச் சந்தையாக மாற்றப்படவுள்ளது.  இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வெளியூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு,  குறித்த சந்தைப்பகுதியில் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஓரு களமாக அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0

  • R.A.N. V.rajah Wednesday, 27 November 2013 03:26 PM

    சிறுவர் பூங்காவிக்கு அருகில் கடைத் தொகுதி, கடைந்தெடுத்த
    முட்டாள் வேலை...

    Reply : 0       0

    R.A.N. V.rajah Wednesday, 27 November 2013 03:28 PM

    சிறுவர் பூங்காவுக்கு அருகில் நூல் நிலையம் அமைப்பது சிறந்தது...

    Reply : 0       0

    m a m.sameem Friday, 29 November 2013 03:42 PM

    நல்ல முயற்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X