2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

தேவையற்ற காரணங்களுக்காக பணம் அறவிடப்படுவதாக முறைப்பாடு

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் மாணவர்களிடம் தேவையற்ற காரணங்களுக்காக பணம் அறவீடு செய்யப்படுவதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும், குறித்த பண அறவீடு இடம்பெறும் பாடசாலைகள் அடையாளம் காணப்படும் பட்டசத்தில், அச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் பாடசாலை நிர்வாகம் பிரத்தியேக தேவைகளுக்காக மாணவர்களிடம் மாதந்தம் பணம் அறவீடு செய்வதாக பெற்றோர் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக அரச பாடசாலைகளில் மாணவர்களிடம் வசதிக்கட்டணம், பரிட்சைக்கட்டணம் ஆகியவை மாத்திரமே அறவிடப்பட முடியும்.

வேறு எந்த கட்டணங்களும் அறவிடப்பட முடியாது. ஆனால் சில பாடசாலையில் பழைய மாணவர் சங்கத்தினுடாகவும், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஊடாகவும் பணம் அறவிடப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைக்கான மின் பட்டியலுக்காண கட்டணம், காவலாளிக்கான சம்பளம், பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு சமைத்துக்கொடுப்பவர்களுக்கான சம்பளம் போன்றவற்றிற்காக  குறித்த சில பாடசாலைகளில் மாதந்தம் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பணம் அறவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான கட்டண அறவீடுகள் இடம்பெறும் பாடசாலைகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் உரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாடசாலை மாணவர்களிடம் பண அறவீடு செய்வதற்கு பழைய மாணவர் சங்கம் எவ்விதத்திலும் துனை போக முடியாது எனவும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X