2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிங்களமொழிப் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்திலுள்ள பல்வேறு திணைக்களங்களிலும் பணியாற்றும் தமிழ் அரசாங்க  உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட  சிங்களமொழிப் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு இன்று வியாழக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

'வந்தாரை வாழவைக்கும் வவுனியா' எனும் தொனிப்பொருளில்  பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிக்கற்கை மற்றும் பயிற்சி நிறுவகத்தால் நடத்தப்பட்ட இப்பயிற்சிநெறியில் 41 அரசாங்க உத்தியேகத்தர்கள் சிங்களமொழிப்  பயிற்சியை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

இதற்கான  நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், தேசிய மொழிக்கற்கை மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் எச்.கேரத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X