2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானைகளால் தென்னியங்குளம் மக்கள் அவஸ்தை

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இருக்கும் தென்னியன்குளம் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் பிரதேச செயலகத்திடம் முறையிட்டுள்ளனர்.

மீளக்குடியேறிய நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் மேற்படி கிராமம் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.

இரவு வேளைகளில் கிராமத்திற்குள் நுழையும் யானைகள் அங்கிருக்கும் பயன்தரும் மரங்கள், பயிர்களையும் அழித்துவிட்டுச் செல்கின்றன.
இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காட்டுயாணைகள் ஊருக்குள் நுழைவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X