2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண முதலமைச்சர் - மன்னார் ஆயர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன்  லெம்பேட்


வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில்  நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணிப் பிரச்சினைகள், இராணுவத்தினரின் தலையீடுகள், அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம், அமைச்சர் ஒருவரின்  தன்னிச்சையான செயற்பாடுகள், மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், மீள்குடியேற்ற கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் உட்பட  மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்; முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான பிரிமூஸ் சிராய்வா,  ஜீ.குணசீலன், அயூப் அஸ்மீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0

  • Sumathy M Sunday, 01 December 2013 01:45 PM

    என்னத்தை கதைக்கப்போகிறார்கள் வெறுவாய் சப்பிகள்? காலங்காலமாக தமிழ் மக்களின் அவலங்களை பற்றித்தான் பேசினார்களே தவிர, அவலங்களை போக்க ஏதாவது செய்தார்களா? அவலத்தில் அரசியல் பிழைப்பு நடாத்துபவர்கள் எமக்கு தேவையில்லை. அவலத்தை போக்குபவர்களே எமக்கு இன்று தேவை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X