2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முசலியில் யானைகள் விடப்பட்டுள்ளதாக விசனம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோணியன்குளம் கிராமத்தில் உள்ள  காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக முசலிப் பிரதேச சபை உறுப்பினர் மார்க்கஸ் நீக்கிலாஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மேற்படி யானைகள் கோணியன்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு யானைகள் கொண்டுவந்து விடப்பட்டுள்ளமை தொடர்பில் கோணியன்குளம் கிராம மக்கள் தன்னிடமும் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்;.

மேற்படி யானைகளை யார் கொண்டுவந்து விட்டனர்  என்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

கோணியன்குளம் கிராமத்தில்  பொதுமக்களின் குடியேற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு புதிய வீடுகளும் தற்போது அமைக்கப்பட்டு வருவதுடன், அங்கு  விவசாயச் செய்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X