2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விகாராதிபதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்ல காப்பாளரான கல்யாணதிஸ்ஸ தேரரை தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்ட நீதவான் எஸ். இராமகமலன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை சந்தேகநபரான விகாராதிபதியை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருவதனாலும் முறைப்பாட்டாளர்களின் தடயங்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டும் விளக்கமறியலை நீடித்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி:


சிறுவர் துஸ்பிரயோகம்; அட்டமஸ்கட விகாராதிபதிக்கு எதிராக மேலும் 5 முறைப்பாடு

  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 03 December 2013 02:32 PM

    என்ன ஐயா... இன்னும் விளக்கமறியல்தானா? சீக்கிரமா தண்டனைய கொடுங்களேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X