2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மன்னாரில் எதிர்ப்புப் பேரணி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து மன்னாரில் நாளை வியாழக்கிழமை எதிர்ப்புப் பேரணியும் பிரசாரமும் நடைபெறவுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி கிருசாந்தன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார்  பொதுநூலகத்திற்கு முன்பாக காலை 09 மணியிலிருந்து எதிர்ப்புப்பேரணியும் பிரசாரமும் நடைபெறவுள்ளது.

மன்னார் பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் பேரணி  மன்னார் பொது வைத்தியசாலைவரை செல்லும்.

மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.  இதற்கு  ஒவ்வொருவரும் பொறுப்புக்கூற  வேண்டியவர்களாக உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள்  எதிர்காலத்தில் நடக்காதவாறும் இந்த வன்முறைகளில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X