2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட கிராமங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 29ஆம் திகதி முதல் இம்மாதம் 5ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்பட்டுள்ள நிலையிலேயே முலலைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட பல இடஙகளில் மக்கள் சிரமதான அடிப்படையில் தமது வீடுகள், பொது இடங்கள்,
மதஸ்தலங்கள் எனபனவற்றை துப்பரவு செய்து வருகின்றனர்.

மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது கிராமங்களில் மக்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்புப்பிரிவின் பூச்சியியல் பிரிவினர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு இருக்கின்றனவா என்பது பற்றி பரிசோதனைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையிலும் 52பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அதிகாரியொருவர் குறிப்பிடார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X