2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியாவில் இருவேறிடங்களில் கொள்ளை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலுள்ள  பிரபல வர்த்தக நிலையமொன்றிலும் கற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலும் ஞாயிற்றுக்கிழமை (27) கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வர்த்தக நிலையத்தின்; கூரைகள் உடைக்கப்பட்டு பால்மா, சீனி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்தபோ வீட்டுக் கூரைகள் உடைக்கப்பட்டு மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 

வீடுகளிலுள்ளவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போதே கொள்ளைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X