2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை பிரச்சினைகள் குறித்து செல்வம் எம்.பி.யிடம் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கிராம மக்களை  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக்; கேட்டறிந்துகொண்டார்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்;பட்ட கிராமங்களில்  நீண்டகாலமாக நிலவும்  குடிநீர் பிரச்சினை, மின்சாரம் இன்மை, காணிப் பிரச்சினை, பாதைகள் சீரின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் முன்வைத்தனர்.

அத்துடன், இப்பிரச்சினைகளை  நிவர்த்தி செய்து தருமாறும்  செல்வம் அடைக்கலநாதனிடம் இம்மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து,  துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட வவுனிக்குளம், அம்பாள்புரம் கிராம மக்களையும் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்தார்.

இதன்போது மேற்படி கிராமங்களைச் சேர்ந்த  மக்கள் வவுனிக்குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.  இக்கிராமங்களில் பல குடும்பங்கள்; வாழ்கின்ற நிலையில், சுமார் 100 இற்கும்  மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர்; மீன்பிடியை நம்பியுள்ளதாகவும்
செல்வம் அடைக்கலநாதனிடம் இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூறினர்.

இந்நிலையில், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு சில தனி நபர்கள், வவுனிக்குளம்  அண்டிய பகுதியில் பண்ணை அமைப்பதற்கு 50 ஏக்கர் படி  காணி பிரிப்பதற்கான நடவடிக்கையில்; ஈடுபடுகின்றனர். இதனால், தமது நன்னீர் மீன்பிடிக்கு இச்செயற்பாடு அச்சுறுத்தலாக உள்ளதென  செல்வம் அடைக்கலநாதனிடம் இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X