2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிரிட்டன் உயர்ஸ்தானிகராலய அரசியல்துறை பொறுப்பாளர் மன்னார் விஜயம்

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் டானியல் பெயின்டர் மற்றும் திட்டமிடல் பொறுப்பாளர் சஜானி ரணதுங்க ஆகியோர், இன்று புதன்கிழமை (28) காலை மன்னார் மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் வாழ்வுதையத்தில் இடம்பெற்ற மொழி உரிமை தொடர்பான கலந்துரையாடலில் இவர்கள் கலந்துகொண்டார். இதன்போது, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் மொழி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர்  டானியல் பெயின்டருக்கு விளக்கமளித்தனர்.

குறிப்பாக மன்னார் மாவட்ட அரச திணைக்களங்களில் இருந்தும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் தமிழ் பேசும் ஒருவருக்கு சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள், வைத்தியசாலையில் நோயாளர்கள் வைத்தியர்களுடன் உரையாடும் போது ஏற்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அத்துடன், மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சூசை, திருப்புமுனை மையத்தின் இயக்குநர் அருட்தந்தை வின்சன் பற்றிக் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X