2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் ஆளணிப்பற்றாக்குறை

Sudharshini   / 2014 நவம்பர் 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் ஆளணிப்பற்றாக்குறை காணப்படுவதாக பிரதேச சபையின் செயலாளர் சு.ரவீந்திரநாதன் நேற்று செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச சபையில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமையினால்,  அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் செயலாளரின் தலமையிலேயே இடம்பெற்று வருகிறது. எமது சபையின் கீழ் ஐந்து உப அலுவலகங்கள் இயங்குகின்ற போதிலும், பிரதான அலுவலகம் மற்றும் உப அலுவலகங்களில் கடமையாற்றுவதற்கு போதியளவு ஊழியர்கள் இல்லை.

மேலும், தொழிலாளி, காவலாளி, முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள், மின்னிணைப்பாளர்கள் என பல வெற்றிடங்கள் காணப்படுகிறன.

எனவே, எமது சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்து கொடுத்தால், மக்களுக்கு தற்போது செய்யும் பணியை விடவும் மேலும் கூடுதலான பணிகளைச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .