2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யானைகளின் தொல்லைகளால் மணற்குளம் கிராமத்தவர்கள் அச்சம்

Kanagaraj   / 2014 நவம்பர் 19 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்;பட்ட பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் உள்ள மணற்குளம் கிராமத்தில் இன்று புதன்கிழமை (19) அதிகாலை புகுந்த சில காட்டு யானைகள், அங்குள்ள வீட்டுத் தோட்டத்தை நாசப்படுத்தி உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் இரவு நேரங்களில் கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். இது தொடர்பாக அம்மக்கள்; மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் பின்பு நாங்கள் 2003 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம். ஆனால் எங்களுக்கு இதுவரைக்கும் அரசாங்கத்தினால் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. எங்கள் கிராமத்தில் உள்ள வீதிகள் இதுவரை திருத்திக்கொடுக்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க தற்போது விவசாயக் காலம் என்பதால் காட்டு யானைகளின் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .