2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கட்டாகாலிகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை

Gavitha   / 2014 நவம்பர் 23 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலிகளினால் பல விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு தொடக்கம் மாஞ்சோலை, முள்ளியவளை ஊடாக, ஒட்டுசுட்டான்  செல்லும் பிரதான வீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலியாக ஆடுகளும் மாடுகளும் கூட்டமாக சுற்றித்திரிவது, படுத்துறங்குவது என்பவற்றினால் அவ்வீதிகளின் ஊடாக பயணிக்கும் பயணிகள் பல்வேறு அசளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் வீதியின் நடுவே நிற்பது மற்றும் படுத்துறங்குவது என்பவற்றினால் அடிக்கடி சிறு விபத்துச்சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னாள் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை என்பன கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகளுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியதுடன், அது தொடர்பில் தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தனர். சிறிது காலம் குறைவடைந்த கட்டாக்காலிகளின் தொல்லை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .