2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஜ.தே.கவில் இணைவு

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரன் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்துகொண்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் டெலோ ஆகியவற்றில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்தி தலைவராக செயற்பட்ட இவர் அண்மைக்காலமாக அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து அவர், இணைந்துகொண்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .