2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் தினம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்ட செயலகம், மாவட்ட சமூகசேவை அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு வவுனியாவில் புதன்கிழமை  (3) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா பஸ் நிலைய பேரூந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசனம்; ஒதுக்கும் நடவடிக்கைகளுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. பின்னர்,  அங்கிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி, வவுனியா நகரசபை மண்டபம்வரை சென்றது. அங்கு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட  அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர பிரதம விருந்தினராகவும் மேலதிக அரசாங்க  அதிபர்  சரஸ்வதி மோகநாதன், வடமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .