2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மும்மொழிகளை அமுலாக்க மகஜர் கையளிப்பு

Gavitha   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்,நவரத்தினம் கபில்நாத்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மும்மொழி அமுலாக்கல் தொடர்பான மனுகையளிப்பு நிகழ்வு, மன்னார் மாவட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட மொழிச்சங்கங்களின் ஒன்றியத்தால் மன்னார் நகரசபை மற்றும் மன்னார் பிரதேச சபை தலைவர்களுக்கு புதன்கிழமை (10) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில்,

தங்கள் நிர்வாக பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அரச, தனியார், பொது நிலையங்களில் புதிதாக ஆரம்பிக்கப்படும் வியாபார நிலையங்களுக்கு இடப்படும் பெயர் பலகைகளில் மும்மொழிப் பயன்பாட்டை மேற்கொள்ள ஆலோசனை வழங்குமாறு, வேண்டுகோலொன்றை முன்வைக்கின்றோம்.

இவ் வேண்டுகோளானது அரசகரும மொழிகள் ஆணைக்குழு விதந்துரைத்துள்ள 1991/8ஆம் இலக்க சட்டத்தின் அரசியல் அமைப்பின் VIஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளை மேற்கோள் காட்டியே இவ் வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது என்பதை நாம் பிரகடனப்படுத்துகிறோம்.

அத்துடன் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் நிமிர்த்தம் தாங்கள் ஏற்படுத்தக்கூடிய துணை விதிகள் என்ற பிரமாணத்தில் எதிர்கால சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட பல்லினத் தேசியம் என்பதற்கு வலுவூட்டும்; தங்களுக்கு இவ்  வேண்டுகோளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .