2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொலிஸார் காட்டிக்கொடுப்பதில்லை: கிளிநொச்சி மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்

Thipaan   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு அடையாளப்படுத்தி தரும் போது, அடையாளப்படுத்தும் பொதுமக்களை பொலிஸார் காட்டிக்கொடுப்பதில்லை என கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எட்மன் மகேந்திரா, வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம், பிரமந்தனாறு, பரந்தன், திருநகர்அக்கராயன்குளம், வட்டககச்சி, ஊரியான் போன்ற கிராமங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியன அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பொலிஸாருக்கு தாங்கள் அடையாளப்படுத்தி காட்டும் போது, பொலிஸார் குற்றவாளிகளிடம் இவர்கள் தான் உங்களை அடையாளப்படுத்தினார்கள் என அடையாளப்படுத்தியவர்களை காட்டிக்கொடுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இது பற்றி கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பதில் பொலிஸார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் எங்களுக்கு அடையாளப்படுத்தி தரும் போது, அடையாளப்படுத்தி தருபவர்களை நாங்கள் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம். அவ்வாறானதொரு சம்பவம் இதுவரையில் இடம்பெற்றிருக்கவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை குறைக்கும் நோக்குடன் பொலிஸார் சிறப்பாக செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .