2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கைப்பணி கண்காட்சி

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டச் செயலகத்தின் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில், கிராம மட்டங்களிலுள்ள பெண்கள் அமைப்புகளினால் உருவாக்கப்பட்ட கைப்பணிப்பொருட்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு வவுனியா காமினி மகாவித்தியாயலத்தில் வெள்ளிக்கழமை (12) நடைபெற்றது.

சமூக மட்டத்தில பெண்களின்; கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் முகமாக, கைவண்ணத்தில் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், ஆடைகள், அழகு சாதனப்பொருட்கள், மற்றும் பனை வேலை பொருட்கள் இதன்போது, காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச. மோகநாதன், வவுனியா மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள்,  பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .