2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சர்வமத மற்றும் சமூகத் தலைவர்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்

Sudharshini   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சமாதானம் மற்றும் நல்லிணத்துக்காக சர்வமத மற்றும் சமூகத் தலைவர்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் விசேட நிகழ்ச்சித் திட்டம் சனிக்கிழமை (13) மன்னாரில் இடம்பெற்றது.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டிலும் மன்னார் ஆர்.பி.ஆர் அமைப்பின் அனுசரனையில் மன்னார் ஆஹாஸ் விடுதியில் நடைபெற்றது.

 கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பங்களிப்பின் அடிப்படையில் மதங்களுக்கிடையிலான சர்வமத பேரவை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வமத வேறுபாடுகளின் அடிப்படையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சர்வ மத தலைவர்கள் மற்றும் சமூக மட்ட தலைவர்கள் ஆகியோரை ஒன்றினைத்து இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், தேசிய சமாதான பேரவையின்  நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சமன் செனவிரட்ண, தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகஸ்தர் எஸ்.ஏ. அப்துல் அமான், சமாதானத்திற்கும் மீளிணக்கத்திற்குமான வளங்கள் நிறுவனத்தின் (ஆர்.பி.ஆர்.) திட்ட முகாமையாளர் எஸ்.செல்வநன்தராஜன், தேசிய சமாதான பேரவையின் மன்னார் மாவட்ட  அங்கத்தவர்கள் சர்வமத தலைவர்கள், சகமட்டத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .