2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் நகர சபையின் இவ்வருடத்துக்கான இறுதிக்கூட்டம்

Sudharshini   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபையின் இவ்வருடத்துக்கான இறுதிக்கூட்டம் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

மன்னார் நகர சபை பெறுப்பேற்கப்பட்டு 3 வருடங்களும் 8 மாதங்களையும் கடந்துள்ள நிலையில், நகர சபையின் பணியாளர்கள் உறுப்பினர்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.இச்சபையில் மேற்கொள்ளப்படும் அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்படுகின்றது என சபையின் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
மேலும், மன்னார் நகர சபையில் கருத்து வேறுபாடுகள் பல காணப்படுகின்ற போதும் சபையில் முன் வைக்கப்படுகின்ற தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாங்கள் பல சேவைகளை இந்த மக்களுக்கு செய்துள்ளோம். அரசாங்கத்தினால் எமக்கு கிடைக்கின்ற உதவிகள் போதாது. அமைச்சினாலும் கிடைக்கின்ற உதவிகள் கூட பெரிதாக கிடைப்பதில்லை. இருந்தாலும் மக்களின் வறிப்பணத்தைக் கொண்டு சிறப்பாக இந்த வேளையை முன்னெடுத்து வருகின்றோம்.

இது வரை மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வேளைத்திட்டங்களை பட்டியலிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் மேற்கொண்டுள்ள வேளைத்திட்டங்கள்; மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை.

மேலும் பொது நலத்துடன் சிந்திக்கின்ற தன்மை எமது மக்களுக்கு இருக்க வேண்டும். அவர்கள் மன்னார் நகர சபையுடன் இணைந்து செயல்பட்டு எமக்காக கதைக்க வேண்டும். சிலருடைய கருத்துக்கள் எமக்கு எதிரானதாக உள்ளது.

இருந்தாலும் நகர சபையின் உறுப்பினர்கள் எவறும் சுய நோக்குடன் செயற்பட்டது இல்லை. மக்களுக்காக எவ்வளவு தியாகங்களை அவர்கள் செய்துள்ளனர். நாங்கள் பல்வேறு கசப்பான வார்த்தைகளை கேட்டும் எமது மக்களுக்காக கோபங்களை அடக்கி சேவையாற்றி வருகின்றோம் என மன்னார் நகர சபை தலைவர்; தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நகர சபையின் செயலாளர் எக்.எல்.றொனால்ட், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறப்பினர்களான இ.குமரேஸ், சி.மெரினஸ் பெரேரா, எஸ்.பிரிந்தாவனநாதன், எஸ்.செல்வக்குமார் டிலான், என்.நகுசீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .