2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கணவர் தொடர்பில் முறைப்பாடு செய்தால் கடத்துவேன் என அச்சுறுத்தியதாக மனைவி சாட்சியம்

Sudharshini   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

காணாமல் போன எனது காணவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தால், பெண் என்று பார்க்காது கடத்தி செல்வோம் என புளொட் அமைப்பின் முன்னாள் இராணுவ பொறுப்பாளர் சிவா அச்சுறுத்தியதாக சிவானந்தம் ஜெனிதா காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் புதன்கிழமை (17) சாட்சியமளித்துள்ளார்.
.
மகாறம்பைக்குளத்திலிருந்து கடந்த 2008.5.19 அன்று சிவலிங்கம் சிவானந்தன் என்ற எனது கணவர் (வயது 30) வவுனியா நகருக்கு சென்றிருந்த போது, ஆட்டோ ஒன்றில் கடத்தி செல்லப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.
 
அதனையடுத்து, மூன்று நாட்கள் கழித்து, வவுனியாவின் இரு நிலையான தொலைபேசிகளில் இருந்து கணவர் காணாமல் போன விடயம் தொடர்பில் ஒருவருக்கும் தெரியப்படுத்தக்கூடாது எனவும் யாராவது விசாரித்தால் அவர் கொழும்புக்கு வேலைக்கு போய் விட்டதாக கூறுமாறு தெரிவித்தார்கள்.
 
அதன் பின்னர் கணவனை விடுவிப்பதற்கு 50 இலட்சம ரூபாய்; தருமாறு கோரினார்கள். ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தபோது 10 இலட்சம் கேட்டார்கள். கடைசியில் என்னிடமிருந்த  5 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை ஒருவர் வந்து வாங்கி சென்றார். ஆனால், இன்று பணமும் இல்லை, என் கணவரும் இல்லை. என் இரு பிள்ளைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு  கொண்டிருக்கிறேன். 
 
என்னிடம் பணம் பெற்றவர்கள் தம்மை கருணா குழு என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்தை விசாரித்து பார்த்தபோது அது புளொட் இயக்கத்தின் இறம்பைக்குளம் அலுவலக இலக்கங்கள் என அறிந்தேன். 
 
தொடர்ந்து, சிவா என்னிடம் 28 இலட்சம் ரூபாய் பணம் தந்தால் உனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்ப வைக்கிறேன் என தெரிவித்தார். ஆனால் எனது கணவரை காட்டவில்லை. 
 
சில காலம் கழித்து சிவாவை நேரில் கண்டு கேட்டபோது, தான் சிறை சென்று வந்ததாகவும் தற்போது தான் இயக்கத்தில் இல்லை எனவும் கூறினார். ஆனால், என் கணவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்;கு முன் சாட்சியமளித்துள்ளார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .